

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மே 8-ம் தேதி முதல் விடைத்தாள் நகல் கேட்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் இந்த மாத இறுதிக்குள் விடைத் தாள் நகலை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து ஐந்து நாட்களுக்குள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு ரூ. 550, பிற பாடங்களுக்கு ரூ. 275 கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப் பாடங்களுக்கு ரூ. 305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.