

கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் விவசாயி களுக்கு பாதகமாக அமைந்திருப்பதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு விவசாய விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், ஆண்டு தோறும் கரும்புக்கு விலை நிர்ணயிக்கிறது. விலை நிர்ணயம் செய்யும்போது, உற்பத்திச் செலவு மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறு வனங்களில் உற்பத்திச் செலவை கணக்கில் எடுப்பதில்லை.
சர்க்கரை விற்பனை விலையில் விவசாயிக்கான பங்கை அளிக் கும் சட்டப் பிரிவு 5 ஏ-யை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கான 10 சதவீதம் லெவியும் ரத்து செய் யப்பட்டுள்ளது. இதனால் கரும் பாலைகளுக்குத்தான் கூடுதல் லாபம்.
ஒரு டன் கரும்பில் இருந்து சர்க்கரை ரூ. 280, 450 கிலோ சக்கை விற்பனையில் ரூ.727, 35 மொலாசஸ் விற்பனையில் ரூ.146, 35 கிலோ பிரஸ்மெட் (மண் கழிவு) ரூ.10 என மொத்தம் ரூ.1,163 கரும்பாலைக்கு லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 3,500 டன் கரும்பு அரவைத் திறன் உள்ள ஒரு ஆலைக்கு ரூ.40 லட்சம் வருமானம் கிடைக்கிறது. சர்க்கரைத் துறையில் நெருக்கடி என ஆலை அதிபர்கள் கூறுவது ஏமாற்று வேலை. நஷ்டம் காரண மாக ஒரு சர்க்கரை ஆலை கூட மூடப்படவில்லை.
சர்க்கரை ஏற்றுமதிக்காக டன் னுக்கு ரூ.4 ஆயிரம் மானியம் அளிக்கப்படுகிறது. மேலும், சர்க் கரை இறக்குமதி வரி 25 சதவீதத் தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலு டன் கலக்கப்படும் எத்தனால் உற்பத்தி வரி 12.36 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள் ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு மிகவும் பாதக மாக உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் கரும்பு விவசா யத்தை பாதுகாக்கவும், கட்டுப் படியான விலை கிடைக்கவும் வழிசெய்ய வேண்டும். விவசாயி கள் கரும்பு சாகுபடியைக் கை விடும் நிலைக்குத் தள்ளக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.