

தமிழகத்தில் இரு வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் மணிமொழி. இவரது மனைவி மாலினி(41), மகன்கள் அபிஷேக் கிறிஸ்துராஜ்(15), சிபிராஜா(8), இவர்களது உறவி னர்கள் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த எஸ்.அருள்ஷாம் பெஞ்சமின்(18), டி.ஜஸ்வந்த் (15), ஈரோடு மாவட்டம் அவல்பூந் துறையைச் சேர்ந்த ஆர்.சுபாஷ் (19), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜெ.டேனியல் (12) ஆகியோர் வெள்ளக்கோவிலில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் பகுதிக்கு நேற்று சுற்றுலா வந்தனர். கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவரும் அருள்ஷாம் பெஞ்சமின் காரை ஓட்டியுள்ளார்.
அவர்களது கார், அன்னூரை அடுத்துள்ள குருக்கிலியாம் பாளையம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த தாகக் கூறப்படுகிறது. இதனால், நிலைதடுமாறிய கார், மேட்டுப் பாளையத்தில் இருந்து சொக்கம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்துடன் மோதியது. இதில், பேருந்தின் அடிப் பகுதியில் சிக்கி, கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த மாலினி, மகன் சிபிராஜா, அருள்ஷாம் பெஞ்சமின், ஜஸ்வந்த், சுபாஷ், டேனியல் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அபிஷேக் கிறிஸ்துராஜ் படுகாயங் களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டார்.
திண்டிவனம் அருகே 4 பேர் பலி
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது காரில் குடும்பத்தினருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாலாவதி கிராமம் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை கார் வந்தது. அப்போது, திருவண்ணாமலை புறவழிச் சாலையில் வந்த அரசு பேருந்து ஒன்று திடீரென சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வலது புறம் திரும்பியது.
அரசு பேருந்து திடீரென திரும்பியதால் பேருந்தின் பக்க வாட்டில் கணேசன் ஓட்டி வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில், கணேசன் (60), அவரது மகன் கார்த்திக் (30), கார்த்திக் மனைவி ஜமுனா (25) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கணேசன் மனைவி சுகந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த வீரமணி, கவிதா, வீரம்மாள் ஆகிய 3 பயணி கள் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள் ளனர். ரோஷணை போலீஸார் தப்பி யோடிய அரசு பேருந்து டிரைவரை தேடி வருகின்றனர். சென்னைக்கு திருவண்ணாமலையில் இருந்து செல்லும் அனைத்து பேருந்து களும் திண்டிவனம் வந்து செல்லு மாறு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டும்கூட அரசு பேருந்து ஓட்டுநர்கள் பொருட்படுத்து வதில்லை. புறவழிச் சாலையில் வந்தது மட்டுமன்றி பிரதான சாலையிலும் அரசு பேருந்து வேகமாக திரும்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.