பாமக ஆட்சிக்கு வந்தால் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்க நடவடிக்கை: ஜி.கே.மணி உறுதி

பாமக ஆட்சிக்கு வந்தால் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்க நடவடிக்கை: ஜி.கே.மணி உறுதி
Updated on
1 min read

பாமக ஆட்சிக்கு வந்தால் திருப்பத் தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

திருப்பத்தூரில் பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மது விற்பனையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

எனவே, மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி மே 14-ம் தேதி பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வேலூரில் ‘மது ஒழிப்புப் போராட்டம்’ நடை பெறும். ஆந்திர முதல்வர் தொகுதி யான கணேசபுரத்தில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. புதிய அணை கட்டுவதை ஆந்திர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

தமிழக பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் முறையான அழைப்பு கொடுக்க வில்லை. தமிழகத்தின் உரிமைகளைப் பெறவும், தட்டிக்கேட்கவும் முதல்வரின் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் தான் நம் வலிமை மத்திய அரசுக்குப் புரியும்.

வேலூர் மாவட்டம் பெரிய மாவட் டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரித்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

திராவிடக் கட்சிகள் இதற்கான வழி முறையை மேற்கொள்ளவில்லை. எனவே, பாமக ஆட்சிக்கு வந்தால், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகும்’’ என்றார்.

நிகழ்ச்சியின்போது, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பொன்னு சாமி, மாநில துணைத்தலைவர் ராஜா, மாவட்டச் செயலாளர் பூபதி, ஒன்றி யச் செயலாளர்கள் திலகவதி, பன்னீர் செல்வம், குட்டிமணி, ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் தமிழ்செல்வன் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in