Published : 09 May 2015 07:25 AM
Last Updated : 09 May 2015 07:25 AM

பங்காரு அடிகளார் பவள விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை, நீரிழிவு நோய் மருத்துவ முகாம்: பெரியார் நகரில் மே 10, 17-ல் நடக்கிறது

பங்காரு அடிகளாரின் 75-வது அவதார பெருமங்கள பவள விழாவை முன்னிட்டு சென்னை பெரியார் நகர் - அகரம் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நாளையும், அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.

நாளை (10-ம் தேதி) இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் நடக்கிறது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள எம்.என். கண் மருத்துவமனை, சாமதி நேத்ராலயம் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. அனைத்து கண் நோய்களுக்கும் இலவச கண் பரிசோதனை செய்யப்படும். அறுவை சிகிச்சை பெற விரும்புபவர்கள் அன்றே மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். அவர் களுக்கு உணவு, தங்குமிடம், மருந்து, கண்ணாடி இலவச மாக வழங்கப்படும். கிட்டப் பார்வை, தூரப்பார்வை குறைபாடுகளுக்கு கம்ப்யூட்டர் முறையில் பரிசோதனை செய்து குறைந்த விலையில் கண்ணாடி வழங்கப்படும்.

மருத்துவ ஆலோசனை

17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் சார்பில் இலவச நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. நீரிழிவு நோய் பரிசோதனை, உயரம், எடை அளவிடுதல், கால் உணர்வு பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை ஆகியவற்றுடன் உணவுக் கட்டுப்பாடு விளக்க கையேடும் வழங்கப்படும்.

தொடர்புகொள்ள

இந்த இலவச மருத்துவ முகாம்கள் பெரியார் நகரில் உள்ள பெரியார் நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும்.

மேலும் விவரங்களை சக்தி ராஜா ராஜு (7299911349), சக்தி பன்சிலால் (9840461830) ஆகியோரை தொடர்பு கொண்டு அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x