ஐஏஎஸ் தேர்வுகள் குறித்த இலவச கருத்தரங்கம்: சத்யா ஐஏஎஸ் அகாடமி இன்று நடத்துகிறது

ஐஏஎஸ் தேர்வுகள் குறித்த இலவச கருத்தரங்கம்: சத்யா ஐஏஎஸ் அகாடமி இன்று நடத்துகிறது
Updated on
1 min read

ஐஏஎஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் போன்ற குடிமைப் பணிகளை இலக்காக கொண்டவர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாள் இலவச கருத்தரங்கம் இன்று (மே 29) நடக்கவுள்ளது. சத்யா ஐஏஎஸ் அகாடமி இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

பட்டப்படிப்பை முடித்த அல்லது இறுதியாண்டு படிக்கும் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். இக்கருத்தரங்கில் ஐஏஎஸ் தேர்வை எதிர்கொள் ளும் முறை, புதிதாக ஏற்படுத் தப்பட்டுள்ள மாற்றங்களை எதிர்கொள்ளும் நுணுக்கங்கள், தேர்வில் வெற்றி பெற தேவை யான ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் விதம் போன்றவை குறித்து சமீபத்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களால் விவரிக்கப்படும்.

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் சத்யா ஐஏஎஸ் அகாடமியை 044-26222360 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in