

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யின் பேரவை(செனட்) உறுப்பினர்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி பேராசிரியை குமுதா லிங்கராஜ் உட்பட 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யின் பேரவை யில் 6 உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. இப்பதவி களுக்கு பல்கலை.யின் கட்டுப்பாட் டில் உள்ள கல்லூரிகளில் இருந்து 6 பேராசிரியர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இதன்படி சேலம் அன்னபூர்ணா மருத்துவ கல்லூரி பேராசிரியர் என்.பிரசன்னா பாபு, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் பிரிவு பேராசிரியர் குமுதா லிங்கராஜ், நெல்லை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் எம். பால்ராஜ், சென்னை மாதா மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஏ. கலைச் செல்வி, சென்னை தாகூர் மருத்துவக்கல்லூரி மருத்துவர் எம். பாலமுருகன், திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குருதத்தா எஸ்.பவார் ஆகிய 6 பேரும் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இவர்கள் மூன்றாண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பர்.
இதற்கான அறிவிப்பை பல்கலை. பதிவாளர் ஜான்சி சார்லஸ் வெளியிட்டுள்ளார்.