

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து பேச வாய்ப்பளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாமன்ற கூட்டத்தில் நேற்று குடிநீர் பிரச்சினை தொடர் பாக பேச திமுக உறுப்பினர்கள் முயன்றனர். அவர்களுக்கு பதில் அளித்த மேயர் சைதை துரைசாமி, குடிநீர் வழங்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி மேற்கொள்ளவில்லை. அது குறித்து மாமன்றத்தில் பேச அனுமதிக்க முடியாது என்றார்.
இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள், இன்றைய கூட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 88 தீர்மானங்களில் குடிநீர் பிரச்சி னையை தீர்ப்பது தொடர்பாக எந்த அம்சமும் இடம்பெறவில்லை எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண் டித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் வாயிலில் காலி குடங்களு டன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக திமுக உறுப்பினர் டி.சுபாஷ்சந்திரபோஸ் கூறியதாவது:
சென்னையில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனியார் லாரி களில் கொண்டு வந்து ஒரு குடம் தண்ணீரை ரூ.6-க்கு விற்பனை செய்கின்றன. இது போன்ற பிரச்சினை குறித்து திமுக உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.