

உதவிப் பொறியாளர் (தொழில் கள்) பதவிக்கான தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் தேர்வு நடைமுறை அதிருப்தி அளிக்கிறது என்றும் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
உதவிப் பொறியாளர் நியமனம் தொடர்பாக எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி டி.ஹரிபரந் தாமன் இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு தொழில்கள் சார்பு பணிக்கு உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. எழுத்துத் தேர்வு முடிந்த பிறகு, மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. எழுத்துத் தேர்வு முடிந்ததும் தேர்வு எழுதிய அனைவரது மதிப்பெண்களையும் வெளியிடுவதுதான் வெளிப்படைத் தன்மையாக இருக்கும்.
துரதிருஷ்டவசமானது
ஏராளமானோர் எழுதிய குரூப் 4 தேர்வில், எழுத்துத் தேர்வுக்குப் பிறகு மதிப்பெண்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. உதவிப் பொறியாளர் பதவிக்கான தேர்வை குறைவான நபர்கள் தான் எழுதியுள்ளனர். ஆனால் இதன் மதிப்பெண்கள் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது.
மனுதாரர்களின் மனுக்களை முடித்துவைத்தாலும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை குறித்து எனது அதிருப்தியை பதிவு செய்ய விரும்புகிறேன்.
நேர்காணலுக்கு அழைக்க வேண்டியவர்களின் தகுதியைத் தெரிந்துகொள்வதற்காக சான் றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண் டியவர்களின் பட்டியலை கடந் தாண்டு செப்டம்பர் 16-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே ஒருவரை நேர்காணலுக்கு அழைக்க முடியும். சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் ஒருவரை நேர்காணலுக்கு அழைக்க முடியாது. எனவே, உதவி பொறியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு மட்டும் முடிந்திருக்கும் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு தேவையற்றது.
பொதுவாக எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் அழைப்புக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்.
வழக்கு முடித்துவைப்பு
அந்த அடிப்படையில் அனைத்து நியமனங்களுக்கான தேர்வு மதிப்பெண்களை வெளியிட வேண்டுமென நான் கருதுகிறேன். பணிக்காக நபர்களைத் தேர்வு செய்யும்போது சான்றிதழ் சரிபார்க் கலாம்.
அதற்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு தேவையில்லை. எனவே, உதவிப் பொறியாளர் (தொழில்கள்) பதவிக்காக தேர்வு எழுதிய அனைவரது மதிப்பெண்களையும் தாமதமின்றி டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளி யிட வேண்டும். இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.