

சிறுநீரகங்கள் செயலிழந்த மக னுக்கு, தாய் தன்னுடைய ஒரு சிறு நீரகத்தை தானமாக கொடுத்தார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தினேஷ் (23). தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதி யாக வேலை பார்க்கிறார். உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் 6 மாதத்துக்கு முன்பு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது 2 சிறு நீரகங்களும் செயலிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் அவருக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவரது தாய் தனது 2 சிறுநீரகங்களில் ஒன்றை மகனுக்கு தானமாகக் கொடுக்க முன்வந்தார். இதையடுத்து, மருத் துவமனை டீன் டாக்டர் நாராயண பாபு உத்தரவின்படி சிறுநீரகத் துறைத் தலைவர் டாக்டர் வி.பல ராமன், டாக்டர் முத்துலதா தலைமை யிலான குழுவினர் கடந்த மாதம் 7-ம் தேதி இதற்கான அறுவை சிகிச் சையை மேற்கொண்டனர். தாயின் ஒரு சிறுநீரகத்தை அகற்றி, தினே ஷுக்கு வெற்றிகரமாகப் பொருத்தினர். நோயாளிக்கு ஸ்டீராய்டு மருந்து செலுத் தாமல், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.