

காஞ்சிபுரம் மாவட்டம், ஓட்டேரியை அடுத்த மண்ணிவாக்கம் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (55). காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சி 12-வது வார்டு கவுன்சிலராகவும். அதே பகுதியின் அதிமுக கிளைச் செயலாளராகவும் இருந்த கிருஷ்ணராஜ், நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக ஓட்டேரி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மணி (26), வினோத் (25), தீபக் (29), மைக்கேல்ராஜ் (25) ஆகிய 4 பேர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். நீதிபதி உத்தரவின்பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.