Published : 27 May 2015 07:52 AM
Last Updated : 27 May 2015 07:52 AM

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளின் டிசம்பர் மாத பருவத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனம் 98.33 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி 93.36 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்திலும், ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப நிறுவனம் 92.68 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

முதல் 20 இடங்களைப் பெற்றுள்ள கல்லூரிகளில் 6 கல்லூரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 3 கல்லூரிகள் திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளன. முதல் 20 இடத்தில் சென்னையில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே கல்லூரி மீனாட்சி சுந்தரராஜன் கல்லூரி. இதன் தேர்ச்சி சதவீதம் 85.18.

இந்தப் பட்டியலில் 89.1 தேர்ச்சி சதவீதம் பெற்று பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி 7-வது இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள் குழுமத் தலைவர் டாக்டர் கே.வாசுதேவன் கூறும்போது, ‘‘எங்கள் கல்லூரி தொடங்கியதில் இருந்தே முதல் 20 இடங்களில்தான் இடம்பெற்று வந்துள்ளது.

இம்முறை பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், டிசிஎஸ், சிடிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் எங்கள் மாணவர்களுக்கு வேலை கிடைத்துக் கொண்டிருக்கிறது’’ என்றார்.

டாப் 10 கல்லூரிகள்

1. பிஎஸ்ஜி தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், கோவை

2. ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்

3. ஸ்ரீசாய்ராம் தொழில்நுட்ப நிறுவனம், காஞ்சிபுரம்

4. ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி

5. ராம்கோ தொழில்நுட்ப நிறுவனம், விருதுநகர்

6. ஸ்ரீசிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்

7. பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்

8. வின்ஸ் கிறிஸ்தவ மகளிர் பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி

9. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, வேலூர்.

10. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, சென்னை

முழு விவரங்களை annauniv.edu இணையதளத்தில் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x