Published : 30 May 2015 09:23 AM
Last Updated : 30 May 2015 09:23 AM

சென்னை தாம்பரத்தில் 3-வது ரயில்வே முனையம்: ‘இந்த நிதி ஆண்டுக்குள் முடிக்கப்படும்’

தாம்பரத்தில் நடந்து வரும் 3-வது ரயில்வே முனையம் அமைக்கும் பணிகள் இந்த நிதி ஆண்டுக்குள் முடிக்கப்படும் என ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் லாஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகளின் சேவையை மேம்படுத்தவும், ரயில்வேயின் சாதனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரயில்வே சார்பில் நாடு முழுவதும் கடந்த 26-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மத்திய ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் லாஜ்குமார் நேற்று காலை 10.30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். பின்னர், அங்குள்ள ரயில் பயணிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை - பெங்களூரு இடையே அதிவேக ரயில் தடங்கள் குறித்து சீன ரயில்வே குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர். அந்த ஆய்வறிக்கை இந்திய ரயில்வே துறையிடம் வழங்கப் பட்டுள்ளது. இந்த தடத்தில் அதிகமாக வளைவுகள் இருப்பதா கவும், முதலீடு செலவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தை எப்போது செயல் படுத்துவது என்பது குறித்து மத்திய ரயில்வே வாரியம் முடிவு செய்யும்.

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூரையடுத்து தாம்பரத்தில் 3-வது ரயில்வே முனையம் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரும் நிதி ஆண்டுக்குள் முழுமை யாக பணிகள் முடிக்கப்படும். சென்னை கன்னியாகுமரி, சென்னை கோவை இடையே அதிவிரைவு ரயில்களை இயக்க தடம் அமைத்து தர தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து முடிவு செய்யும். சென்னை சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் இடையே 5, 6-வது தடம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்.

சென்னை கடற்கரை கொருக்குப்பேட்டை வரையில் 3, 4-வது தடம் அமைக்கும் பணிகள், கொருக்குப்பேட்டை அத்திப் பட்டு வரையிலும் 3, 4-வது தடம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடையும்போது, ரயில் சேவை அதிகமாக இருக்கும். ரயில்கள் காத்திருக்க வேண்டியது குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா கூறுகையில், ‘‘குடிநீர், கழிப் பறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை குமரி வரையில் இரட்டை பாதை அமைத்தல், கூடுவாஞ்சேரி ஆவடி வரையில் புதிய ரயில் பாதை, தூத்துக்குடி மதுரை வரையில் புதிய ரயில்பாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளை செயல்படுத்த தமிழக அரசு ரயில்வே வாரியத்திடம் பேசவுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x