பூட்டு போடும் போராட்டம்: டாஸ்மாக் முன் திரண்ட 121 பேர் கைது

பூட்டு போடும் போராட்டம்: டாஸ்மாக் முன் திரண்ட 121 பேர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவதற்காக திரண்ட 71 பெண்கள் உட்பட 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கொலை, பாலியல் வன் கொடுமை, கொள்ளை உள்ளிட்ட சமூகவிரோத கேடுகளுக்கு மதுவே முக்கியக் காரணம் என்று பலத்த குற்றச்சாட்டு சமூகத் தில் எழுந்துள்ளது. இந்த நிலை யில், தமிழகத்தில் உள்ள டாஸ் மாக கடைகளை மூட வேண்டும் என்று ஏஐடியுசி பெண் தொழி லாளர்கள் சங்கத்தினர் வலி யுறுத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித் தனர்.

அதன்படி, நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 3 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திரு வள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவதற்காக ஏஐடியுசி திருவள்ளூர் மாவட்டச் செயலர் கஜேந்திரன் தலைமையில், 19 பெண்கள் உட்பட 35 பேர் மதுக் கடை முன் திரண்டனர். பெண்கள் கைகளில் துடைப்பங்களை கொண்டு வந்திருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற அவர்களை போலீ ஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல, மீஞ்சூர் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஏஐடியுசி மாநில துணைத் தலை வரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஏஸ். கண்ணன் தலைமையில் பூட்டு போட முயன்ற 24 பெண்கள் உட்பட 37 பேரை மீஞ்சூர் போலீஸார் கைது செய்தனர்.

அம்பத்தூர் சிடிஎச் சாலையில் உள்ள டாஸ்மாக் முன் ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் துரைசாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பெண்கள் உட்பட 49 பேரை அம்பத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

3 இடங்களிலும் கைது செய்யப்பட்ட 71 பெண்கள் உட்பட 121 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in