சென்னையில் ஆந்திரா வங்கி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னையில் ஆந்திரா வங்கி மீது பெட்ரோல் குண்டு வீச்சு
Updated on
1 min read

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள ஆந்திரா வங்கி மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கீழ்ப்பாக்கம் புதிய ஆவடி சாலை டி.பி.சத்திரம் பகுதியில் 3 மாடி வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் ஆந்திரா வங்கி உள்ளது. வங்கியுடன் ஏடிஎம் மையமும் செயல்படுகிறது. நேற்று அதிகாலை 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வங்கி மீது இரு பெட்ரோல் குண்டுகளை வீசினர். இரண்டும் கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

ஏடிஎம் அறைக்குள் அமர்ந் திருந்த காவலாளி வெங்கடேசன் சத்தம் கேட்டு எழுந்து வந்தபோது, வங்கியின் முன் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தார். வங்கி மேலாளருக்கும், போலீஸுக்கும் தகவல் தெரிவித்தார்.

கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ராமகிருஷ்ணன், உதவி ஆணையர் ஆனந்தகுமார், ஆய்வாளர் பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடைந்து கிடந்த பெட்ரோல் குண்டு பாட்டில் துகள்களையும் சேகரித்தனர். வங்கியின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக் கப்பட்டுள்ளன. அதில் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் செல்லும் இருவரின் உருவங் கள் பதிவாகியுள்ளன. அதை வைத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in