துறைரீதியாக தண்டனை பெற்றதால் 3 போலீஸார் எஸ்ஐ தேர்வு எழுத அனுமதி மறுப்பு

துறைரீதியாக தண்டனை பெற்றதால் 3 போலீஸார் எஸ்ஐ தேர்வு எழுத அனுமதி மறுப்பு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் காவல் துறை எஸ்ஐ பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று முன்தினம் நடை பெற்றது. இத்தேர்வை எழுத காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4,075 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு நடத்தப் பட்டது. இவர்களில் 510 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, காவல் துறையினருக்கான ஒதுக்கீட்டில் சேருவதற்கான காவலர்கள் பங்கேற்கும் எஸ்ஐ எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 303 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 11 பேர் தேர்வெழுத வில்லை. 3 போலீஸாருக்கு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது. இத்தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜய குமார் மேற்பார்வையிட்டார்.

தேர்வெழுத 3 போலீஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜய குமார் கூறும்போது, “காவல் துறையினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் எஸ்ஐ தேர்வெழுத வேண்டு மென்றால், சம்பந்தப்பட்ட போலீஸார் துறைரீதியாக எந்த தண்டனையும் பெற்றிருக்கக் கூடாது. தண்டனை பெற்றிருந்தால் பொதுப் பிரிவுக்கான தேர்வில் வேண்டுமானால் பங்கேற்கலாம். இத்தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள 3 பேரும் துறை ரீதியாக தண்டனை பெற்றுள்ளனர்.

அதனால் அவர்கள் தேர்வில் அனுமதிக்கப்படவில்லை. ஒருவர் தண்டனைக்கு உள்ளான நிலைலும் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப் படையில் தேர்வு எழுதியுள்ளார்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in