

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
12 கடல் மைல் தூரம் வரை உள்நாட்டு மீனவர்களும், அதற்கு மேல் வெளிநாட்டு கப்பல்களும் மீன் பிடிக்க அனுமதி வழங்கலாம் என மீனாகுமாரி கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடிக்க 15 மீட்டர் நீளமுள்ள படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடு களை மத்திய அரசு விதித்துள்ளது.
இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாட்டுக்கு கிடைத்து வரும் அந்நிய செலவாணியும் குறையும். எனவே, மீனாகுமாரி கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது. மீன் பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ. 5,000 ஆக உயர்த்த வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.