

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளாக உள்ள மறைமலைநகர், ஓட்டேரி, கூடு வாஞ்சேரி, வண்டலூர், மண்ணி வாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தது. இதையடுத்து, 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் வண்டலூர் காவல் துணை மண்டலம் ஏற்படுத்தப் பட்டு டி.எஸ்.பி.யும் நியமிக்கப்பட் டார்.
ரோந்து பணியை தீவிரப் படுத்த, வண்டலூர் துணை மண்டலத்தில், தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவைச் சேர்ந்த 25 போலீஸார் நியமிக்கப்பட்டனர். ரோந்து பணிக்காக ஒரு ஜீப், 3 இருசக்கர வாகனங்கள் வழங் கப்பட்டன. ஆனால், புதிதாக பணியமர்த்தப்பட்ட போலீஸார் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, புறநகர் பகுதிவாசிகள் கூறியதாவது: புறநகரில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வரு கின்றன. மாவட்ட எஸ்.பி. நேரடி யாக இதில் தலையிட்டு ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண் டும் என்று அவர்கள் தெரிவித் தனர்.
இதுகுறித்து, வண்டலூர் டி.எஸ்.பி. முகிலன் கூறியதாவது: புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் போலீஸார் ஈடுபடு வதில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. போலீஸார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருசில மாதங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் அயல் பணிகளில் போலீ ஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், ரோந்து பணியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டிருக்க லாம். எனினும், ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.