

சென்னை பாலவாக்கம் விஜிபி லே அவுட் 2-வது பிரதான சாலை யில் வசிப்பவர் தமிழரசி (53). கடந்த 11-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தமிழரசியிடம், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்ப தாகக் கூறி, 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தினகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் மதுரை புதிய விளாங் குடி கணபதி நகரைச் சேர்ந்த குகன்(46), மதுரை சோழவந்தான் ரயில் நிலையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்(21), திண்டுக்கல் சென்னப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டி(21) ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மதுரையில் பதுங்கி யிருந்த 3 பேரையும் நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர்.