

திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் அச்சுறுத்தலே காரணம் என்று கூறி, அதைக் கண்டித்து இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
‘நியாயவிலை கடை விற்பனை யாளர்கள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்களுக்கு காரணமான அதிகாரிகள், சங்க நிர்வாகிகள், வெளியாட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட நியாயவிலை கடை ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
நியாயவிலை கடைகளுக்கு பொருட்களை எடை குறைவின்றி விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.