சிவகங்கை மாவட்டத்தில் 5 நாட்களில் 44 சமூகவலைதள கணக்குகள் முடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் 5 நாட்களில் 44 சமூகவலைதள கணக்குகள் முடக்கம்
Updated on: 
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டத்​தில் கடந்த 5 நாட்​களில் குற்​றச்​செயல்​களை தூண்​டும் வகை​யில் பதி​விட்​டதற்​காக 44 சமூகவலை​தள கணக்​கு​கள் முடக்​கப்​பட்​டன. மேலும், 18 கணக்​கு​களை வைத்​திருப்​போர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டன.

சமூகவலை​தளங்​களில் குற்​றச்​செயல்​களை தூண்​டும் வகை​யில் பதிவு​கள் மற்​றும் சட்​ட​விரோத இணைய நட​வடிக்​கைகளில் ஈடு​படுவோரை போலீ​ஸார் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். மேலும், அவர்​கள் மீது நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. டிஜிட்​டல் விஜில் மூலம் சமூக வலை​தள குற்​றங்​களுக்கு எதிராக பல்​வேறு நட​வடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், சிவகங்​கை​யில் அக். 18-ம் தேதி ரவுடி மதன் என்ற சுள்​ளான் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார். அதைத்​தொடர்ந்து கடந்த 5 நாட்​களாக இன்ஸ்டாகிராம், முகநூல் பக்​கம் போன்ற சமூகவலை​தளங்​களில் குற்​றச்​சம்​பவங்​கள், வன்​முறையை தூண்​டும் வகை​யி​லான கருத்​துக்​கள் அதி​களவில் பதி​விடப்​பட்டு வந்​தன.

அந்த சமூக வலை​தளக் கணக்​கு​களை போலீ​ஸார் முடக்​கி​யுள்​ளனர். கடந்த 5 நாட்​களில் 44 சமூக வலை​தளக் கணக்​கு​களை முடக்​கி​யுள்​ளனர். மேலும் 18 சமூக வலை​தளக் கணக்​கு​களை வைத்​திருப்​போர் மீது வழக்​குப் பதி​யப்​பட்​டன சமூக வலை​தளங்​களில் அவதூறான கருத்​துகளை பதி​விடுவோர் மீது கடுமையான நட​வடிக்கை எடுக்​கப்​படும் என சிவகங்கை மாவட்ட காவல்​துறை எச்​சரித்​துள்​ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 5 நாட்களில் 44 சமூகவலைதள கணக்குகள் முடக்கம்
‘தேசவிரோத கருத்துகளை பரப்பக் கூடாது’ - டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in