காற்றாலை, சூரியஒளி மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வலியுறுத்தல்

காற்றாலை, சூரியஒளி மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வலியுறுத்தல்
Updated on
1 min read

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் செய்யூர் மின்திட்டத்தை கைவிட்டு காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கூறியுள்ளார்.

எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதிப் பகுப்பாய்வுக்கான நிறுவனம் (ஐஇஇஎப்ஏ) சார்பில் செய்யூர் மின்திட்டம் குறித்து நேற்று ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஜெய்சாரதா நிருபர்களிடம் கூறும்போது, “மின்சாரம் உற்பத்தி செய்யும் போது ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.4.90 பைசா அளிக்க வேண்டியிருக்கும். இதுவே, அடுத்த சில ஆண்டுகளில் சராசரியாக ரூ.5.95 பைசாவாக உயரும்’’ என்றார்.

இது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கூறும்போது, “செய்யூர் அல்ட்ரா மெகா மின்திட்டம் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, செய்யூர் மின்திட் டத்தை கைவிட்டு, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in