

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத் தில் அநேக இடங்களில் மழை பெய் யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு அருகே இருந்த காற்று மேல் அடுக்கு சுழற்சி, கேரள கரையோரம் நகர்ந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடலில் இருந்த காற்று மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. எனவே தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும் பாலான இடங்களில் மழை பெய் யக் கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “இரு இடங்களில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம். 2 நாட்களுக்கு பிறகு, மழை படிப்படியாக குறையும்” என்றார்.
சிவகங்கை மாவட்டம் இளை யான்குடியில் 12 செ.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 9 செ.மீ., நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் 7 செ.மீ., கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம், நீலகிரி மாவட்டம் கேத்தி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை நேற்று பதிவாகியுள்ளது.