

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மே 12-ல் மாவட்ட தலை நகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத் திய அமைப்பின் கரூர் கிளை 8-வது மாநாடு கிளைத் தலைவர் கே.தனபால் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.ஜீவானந்தம், மாநில துணைத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், திருச்சி மண்டல செயலாளர் எம்.பன்னீர்செல்வம், மாநிலச் செயலாளர் (பொறியாளர் அமைப்பு) ஜி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு தேவையான அளவு மின் உற்பத்தி செய்வதற் கான திட்டங்கள் தீட்டி, அவற்றை செயல்படுத்தி மின் உற்பத்தி செய்ய வேண்டும். தலைநகரம், நகரம், கிராமம் என பாகுபாடின்றி சரிசமமாக மின்சாரத்தை பகிர்ந் தளிக்க வேண்டும். 7,000 ஒப்பந்த தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பணி யிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் லஞ்சமின்றி நடப்பதில்லை. லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங் களை திருத்தக் கூடாது. நடப்பாண்டு டிச.1-ல் புதிய ஊதியக் குழு நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண் டும். புதிய ஓய்வூதியத் திட் டத்தை திரும்பப்பெற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மே12-ல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.