

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, திரு வள்ளூர், அம்பத்தூர், பூந்த மல்லி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, பொன்னேரி, மாதவரம், பூந்த மல்லி, அம்பத்தூர் ஆகிய 11 வட்டாட்சியர் அலுவலகங் களில் ஜமாபந்தி நடைபெறு கிறது.
கும்மிடிப்பூண்டி வட் டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்தியில், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பங்கேற்று, பொது மக்களிடம் மனுக்களை பெற் றுக் கொண்டார். அப்போது, திருவள்ளூர் எம்.பி. வேணு கோபால், வட்டாட்சியர் பால் சாமி உள்ளிட்டோர் உடனிருந் தனர் இந்த 11 ஜமாபந்திகளில் 2000-க்கும் மேற்பட்ட மனுக் கள் குவிந்தன.