Published : 04 May 2015 07:19 AM
Last Updated : 04 May 2015 07:19 AM

மணலி புறவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைப்பதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

மணலி புறவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைப்பதை எதிர்த்து மணலி பஸ் நிலையம் அருகில் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மணலி டி.என்.எச்.பி. காலனி குடியிருப்போர் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நலச்சங்கத் தலைவர் பி.திருஞானம் கூறியதாவது:

மணலி புறவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது, சுங்கம் வசூலிக்கக் கூடிய சாலைக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே இந்த சாலையில் சுங்கச் சாவடி அமைக்க முடியாது. சுங்கச் சாவடி அமைத்தால், அப்பகுதியை சுற்றி வசிப்போரின் வசதிக்காக சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டும். அந்த வசதியும் செய்துதரப்படவில்லை. இந்த சுங்கச் சாவடி அமலுக்கு வந்தால், சுங்கக் கட்டணத்தை தவிர்க்க கனரக வாகனங்கள் எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தால் எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும். இதனால் மணலி புறவழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலி பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x