

மக்களின் பிரச்சினைகளுக்கு மோடி தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள் ளதாவது:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பாலாற்றுப் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும். தமிழகத்துக்கு அதிக எண்ணிக்கையில் பாசனத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். உர விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டும். தமிழக மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ஈழத்தமிழர்கள் கவுரவத் துடனும், அச்சமின்றியும், சுதந்திர மாகவும் வாழும் வகையில் இலங்கை பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவதற்கும், சிறைபிடிக்கப் படுவதற்கும் உடனடியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.