வெலிங்டன் ராணுவ மையத்தில் தமிழக போலீஸாருக்கு பயிற்சி

வெலிங்டன் ராணுவ மையத்தில் தமிழக போலீஸாருக்கு பயிற்சி
Updated on
1 min read

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 துணைக் கண்காணிப்பாளர் களுக்கு, வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி அளிக்கப் பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்தில் ஆண்டுதோறும் தமிழக காவல்துறை அதிகாரி களுக்குப் பயிற்சி அளிக்கப்படு கிறது. அதன்படி, இந்த ஆண்டு, 5 பெண்கள் உட்பட 24 காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் களுக்கு, ராணுவத்தில் செயல் படுத்தப்படும் போர் கருவிகள், போர் திறன்கள், துப்பாக்கிச் சுடுதல், கையெறிக் குண்டுகளை செயலிழக்கச் செய்தல், திடீர் தாக்குதல், அதி நவீன போர் கருவி களை கையாளுதல் உட்பட பல் வேறு ராணுவப் பயிற்சிகள், கடந்த இரண்டு வாரங்களாக அளிக்கப் பட்டன. பயிற்சி பெற்ற காவல் துறையினர், பல்வேறு மாவட்டங் களில் பணி அமர்த்தப்படவுள்ள னர். பயிற்சி பெற்றவர்களுக்கு, ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சங்வான் வாழ்த்து தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in