

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் தமிழ்ப் பாடத்தில், மாநில அளவில் 4 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், தமிழ் மொழிப் பாடத்தில் நான்கு மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அம்மாணவர்களின் விவரம்:
1) பி.எஸ்.சந்தியா, தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.
2) கே.எச்.ஜேஸ்வந்த், அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
3) டி.கமரன், துரையூர் சௌதம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.
4) பி.ஷர்மிளா, சேலம் ஸ்ரீ வித்யா பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
இவர்களில், மாநில அளவில் சந்தியா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், ஜேஸ்வந்த் 498 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கமரன் மற்றும் ஷர்மிளா தலா 497 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.