

கியூப் மற்றும் யூ.எப்.ஓ டிஜிட்டல் நிறுவனங்களை கண்டித்து திரையுலகைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் சென்னையில் இன்று (10-ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரூ.400 கோடி
கியூப் மற்றும் யூ.எப்.ஓ உள் ளிட்ட சில நிறுவனங்கள் திரைப் படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான கட்டணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகமாக பெற்றுவருகின்றன. மேலும் திரையரங்குகளில் கிடைக் கும் விளம்பரத்தில் ஆண்டொன் றுக்கு கிடைக்கும் 400 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கு தராமல் கியூப் மற்றும் யு.எப்.ஓ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பங்குபோட்டுக் கொள்கின்றன. இது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகினரை நசுக்கும் செயல்.
அந்த நிறுவனங்களின் அத்து மீறலை கண்டிப்பதோடு அதை அரசே ஏற்று நடத்தி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையுலகினருக்கும் நன்மை செய்யவேண்டும் என்று கோரி இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம், பெப்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக அமைப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரிய முதலீட்டு படங்கள்
தயாரிப்பாளர் சங்கம் வெளி யிட்டுள்ள மற்றொரு அறிக்கை யில், சிறிய முதலீட்டு படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்கும், பொருளாதார இழப்புக்கும் தீர்வு காணும் வகையில் 15 கோடிக்கு மேல் உருவாகும் பெரிய முதலீட்டு படங்களை அதன் தயாரிப்பாளர் கள் பொங்கல், ஜனவரி 26, ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய 10 நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும், 15 கோடிக்கு கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களை,
அதன் தயாரிப்பாளர் விரும்பும் எந்த நாட் களிலும் வெளியிட்டுக் கொள்ள லாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை ஜூன் 1- ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக் கிறது.