ரிஷிவந்தியம் தொகுதியில் பாலம் கட்ட மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் நன்றி

ரிஷிவந்தியம் தொகுதியில் பாலம் கட்ட மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் நன்றி
Updated on
1 min read

ரிஷிவந்தியம் தொகுதியில் உயர் மட்ட பாலம் கட்ட மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தொகுதி எம்எல்ஏவும் தேமுதிக தலைவருமான விஜய காந்த் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத் தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 27-ம்தேதி தங்களை சந்தித்தபோது, விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந் தியம் தொகுதியில் திருவண்ணா மலை தியாகதுருகம் சாலையில் மணலூர்பேட்டை அருகே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

இது தொடர்பாக மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் சந்தித்து வலியு றுத்தினேன். அதை ஏற்றுக் கொண்டு மத்திய சாலை மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து அங்கு உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 20 கோடி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பாலம் கட்டினால், திருவண்ணாமலையில் இருந்து திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் தென் மாவட் டங்களுக்கு செல்லும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் எவ்வித சிரமமும் இன்றி செல்ல முடியும். அருகிலுள்ள கிராமங் களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் பயன் பெறுவர். ரிஷிவந் தியம் தொகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை நிறை வேறியதால் அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்காக தங்களுக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன். இவ்வாறு கடிதத்தில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணனை தவிர்த்த விஜயகாந்த்

ரிஷிவந்தியம் தொகுதியில் பாலம் கட்ட நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மோடி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரும், நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பெயரை விஜயகாந்த் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in