

ஆவடி பாதுகாப்புத்துறை தொழிற்சாலையின் பணியாளர் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை ஆராய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை, படை உடை தொழிற்சாலை, இன்ஜின் தொழிலகம் உள்ளிட்டவற்றுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. 2010-ம் ஆண்டு நடந்த தொழில் பழகுநர் தேர்வில் 48 பேர் முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவில்லை என்று தெரியவந்தது.
விசாரணைக் குழு தேவை
கனரக வாகனத் தொழிற் சாலை யில் கடந்த மார்ச் மாதம் நடந்த பணியாளர் தேர்விலும் முறைகேடு கள் நடந்துள்ளன. கடந்த ஏப்ரலில் நடந்த தொழில் பழகுநர் தேர்வில் 3 பேர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளது. இந்த முறை கேடுகள் மற்றும் ஆள்மாறாட்டங் களை கண்டறிய உயர்மட்ட விசா ரணைக் குழு அமைக்க வேண்டும். அதுவரை பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.