

வாசக சாலை அமைப்பின் சார்பில் முழுநாள் இலக்கிய அரங்கு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மனோஜ் தொடக்க வுரை ஆற்றினார். எழுத்தாளர் மாலன் வாழ்த்துரை வழங்கினார்.
முதல் அமர்வில், ‘நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்’ எனும் தலைப்பில் பேராசிரியர் கல்யாணராமன், கவிஞர் திலகபாமா, எழுத்தாளர் அபிலாஷ் ஆகியோர் பேசினர்.
‘கவிதை ரசனை உரையாடல் மற்றும் கவிதை வாசிப்பு’ அமர்வில், தற்கால கவிதைப் போக்குகள் குறித்து கவிஞர் ராஜசுந்தர்ராஜன் உரை யாற்றினார். 21-ம் நூற்றாண்டில் புதிய குரல்கள்’ எனும் தலைப்பில் கவிதைகள் குறித்து கலை விமர்சகர் இந்திரன், நாவல் கள் குறித்து எழுத்தாளர் இமையம், சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் என்.ஸ்ரீராம் ஆகி யோர் பேசினர்.
’தற்கால தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள், வாசகர்கள், சவால்கள்’ எனும் தலைப்பில் பத்திரிகையாளர் அரவிந்தன் பேசினார். பேராசிரியர் அ.ராம சாமி, எழுத்தாளர் நாகரெத் தினா கிருஷ்ணன், கவிஞர் கள் ஆசு, பாரதிசெல்வா, உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.