Published : 19 May 2015 04:04 PM
Last Updated : 19 May 2015 04:04 PM

ஆன்ட்ராய்டு போனுக்கான 5 செயலிகள்: எஸ்கேபி கல்வி குழுமங்களின் மாணவர்கள் சாதனை

ஆன்ட்ராய்டு போன்களுக்கான 5 புதிய செயலிகளை (அப்ளி கேஷன்ஸ்) எஸ்கேபி கல்வி குழுமங்களின் கல்லூரி மாணவர் கள் கண்டுபிடித்து சாதனை படைத் துள்ளனர்.

இது தொடர்பாக எஸ்கேபி கல்வி குழுமங்களின் தலைவர் கு.கருணாநிதி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

எஸ்கேபி பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்கேபி தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவ, மாணவிகள் புதிய கண்டு பிடிப்புகள் மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இதில், ஆன்ட்ராய்டு போன் களுக்கான புதிய செயலிகள் கண்டுபிடிக்க கடந்த 10 மாதங்களாக மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. முடிவில் 35 மாணவ, மாணவிகள் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு, ஆன்ராய்டு போன்களில் பயன் படுத்தப்படும் 5 முக்கிய செயலிகளை கண்டுபிடித்துள்ளனர்.

இதில், எமர்ஜென்சி ஸ்கீரின் சேவர் என்ற செயலியை ஆன்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் என பெற்றோர், மருத்துவர்களின் பெயர், தொலைபேசி எண்கள் படத்துடன் ஸ்கிரீன் சேவராக பயன்படுத்த வேண்டும். எதிர்பாராத விதமாக நாம் விபத்தில் சிக்கினால், அங்கு வரும் மூன்றாம் நபர் நமது செல்போனில் உள்ள ஸ்கிரீன் சேவரில் உள்ள படத்தில் இருப்பவர் களிடம் எளிதாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும்.

இரண்டாவதாக, மகளிருக்காக ‘ஸ்டே சேப்’ எனும் செயலி. இதன் மூலம், பெண்கள் பயணிக்கும் ஆட்டோ, டாக்ஸியின் எண், பயணிக்கும் இடத்தை எஸ்எம்எஸ் மூலம் பெற்றோருக்கு தெரிவிக்க முடியும். அலாரத்தை பயன்படுத்தி னால் வாகனம் பயணிக்கும் இடம் குறித்த தகவல் பெற்றோருக்கு தானாகச் சென்றுவிடும்.

மூன்றாவதாக திருவண்ணா மலை என்ற செயலி. திருவண்ணா மலை நகருக்கு சுற்றுலா வரும் பக்தர்களுக்கானது. அண்ணா மலையார் கோயிலில் தினசரி, விசேஷ பூஜைகள், ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல் அடங்கிய வழிகாட்டி.

நான்காவதாக கல்வி நிறுவனங் களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்த உண்மையான பின்னூட்ட தகவல்களை (ஃபீட்பேக் மேனேஜ்மென்ட்) கல்லூரித் தலைவர் அல்லது முதல்வர் ஆகியோர் தனித்தனியாக தெரிந்துகொள்ள முடியும்.

ஐந்தாவதாக, ‘புக் சோஷியோ’ என்ற செயலி மூலம் மாணவர்கள் தாங்கள் வைத்திருக்கும் புத்தகங்களை மற்ற மாணவர்களுக்கு விற்கவோ அல்லது வாங்கவோ முடியும். புத்தகங்கள் இல்லாமல் வேறு பொருட்களையும் வாங்கவும் விற்கவும் முடியும். இதன்மூலம் குறைந்த விலையில் யார் விற்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

கூகுள் பிளே ஸ்டோரில், skp engineering college என்ற உள்ளீடு உதவியுடன் இந்த 5 செயலிகளை பொதுமக்கள் இலவசமாக தங்களது ஆன்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றார்.

அப்போது, பயிற்றுநர் கே.எஸ்.நாகராஜன், எஸ்கேபி பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.கே.ஞானமூர்த்தி, எஸ்கேபி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x