Published : 28 May 2015 07:34 AM
Last Updated : 28 May 2015 07:34 AM

சவீதா மருத்துவக் கல்லூரியில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பயிலரங்கம்

இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிலரங்கம் சவீதா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் மருத்துவர் சூர்யபிரகாஷ் ராவ், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் கண்ணன், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் பிரதீப் நாயர், குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நாகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 9 முதுநிலை மாணவர்களும் இதில் பங்கேற்ற னர். இதய நோய்கள் குறித்த பல்வேறு தகவல் கள் இந்த பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப் பட்டன. சவீதா மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் ஆஷா மூர்த்தி, டாக்டர் நாராயணஸ்வாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சவீதா பல்கலை. வேந்தர் என்.எம்.வீரய்யன் தலைமை தாங்கினார்.

டாக்டர் சூர்யபிரகாஷ் ராவ் பயிலரங்கை நடத்தினார். இதய ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த 3 பேருக்கு பயிலரங்கின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதே கல்லூரி மற்றும் வெளி கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் இந்த பயிலரங்கில் பயனடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x