Published : 17 May 2015 11:53 AM
Last Updated : 17 May 2015 11:53 AM

மாணவர் சேர்க்கை: கால்நடை பல்கலை. அறிவிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புக்கு இன்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு அலுவலர் டாக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது:

கால்நடை மருத்துவ படிப்புக்கு கடந்த ஆண்டு நேரடி விண்ணப்பம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் என 2 முறைகளும் கையாளப்பட்டது. இந்த முறை முதல் முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் >www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் ஜூன் 4-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனின் விண்ணப்பித்த பிறகு, பூர்த்திசெய்யப் பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து புகைப்படம் ஒட்டி மற்றும் சான்றிதழ்களை இணைத்து தலைவர் சேர்க்கைக் குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், மாதவரம் மில்க் காலனி, சென்னை - 600051 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபாலில் ஜூன் 10-ம் மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புக்கு18,200 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை என்பதால் அதிக அளவில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x