Published : 03 May 2015 09:28 AM
Last Updated : 03 May 2015 09:28 AM

தி இந்து எஜுகேஷன் பிளஸ் சார்பில் சர்வதேச கல்விக் கண்காட்சி: சென்னையில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு - இன்றும் நடக்கிறது

‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ நடத்தும் 2 நாள் சர்வதேச கல்விக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களில் சர்வதேச கல்விக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விசாகப்பட் டினம், ஹைதராபாத், கோவை, கொச்சி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் நடத்தப்படுகிறது. ‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சர்வதேச கல்விக் கண்காட்சியின் 8-வது பதிப்பு சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று தொடங்கியது. இதை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி ஜான் பொனெர் தொடங்கிவைத்தார்.

கண்காட்சி பற்றி அதன் ஒருங்கிணைப்பாளரும் ‘தி இந்து’ இன்டர்நேஷனல் பொது மேலாளரு மான இமானுவேல் கூறியதாவது:

‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் நடத்தப்படும் இக்கண்காட்சி பல மாணவர்களுக்கு வெளிநாட் டில் படிக்கும் வாய்ப்பை ஏற் படுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஹாலந்து, ஆஸ்திரேலியா, துபாய், ஸ்வீடன், சைப்ரஸ், பிலிப்பைன்ஸ், மால்டா, லத்துவியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 53 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இந்த கண்காட்சியில் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்துள்ளன.

படிப்பு, விசா குறித்த விவரங்களை தூதரக அதிகாரிகள் எடுத்துக்கூறி வருகின்றனர். இக்கண்காட்சி மூலம் மாணவர்களும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் நேரடியாக கலந்துரையாட முடிகிறது. ஒவ்வொரு நாட்டின் கல்வித்துறை சார்பில் தனித்தனியே விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. கண்காட்சி நடக்கும் இடத்திலேயே மாண வர்கள் தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துகொள்ள முடியும். கடந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்று பயன்பெற்றனர். இந்த ஆண்டில் அதைவிட அதிக மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் உள்ள அமெ ரிக்க தூதரகத்தின் துணை தூதர்ஜுடித் லெப்பூஷிட்ஸ், தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண் டார். அவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘இந்த சர்வதேச கல்விக் கண்காட்சி மூலம் நிறைய மாண வர்களை சந்திக்க முடிகிறது. அமெரிக்காவில் உள்ள கல்விச் சூழல், படிப்புக்காக விசா பெறு வது போன்ற விவரங்களை இக்கண்காட்சி வாயிலாக மாணவர் களுக்கு எடுத்துக்கூறி வருகிறோம். கல்விக்காகவே எஜுகேஷன் யுஎஸ்ஏ என்ற அமைப்பை அமெரிக்க அரசு உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பின் பிரதிநிதிகளும் இங்கு மாணவர்களை சந்திக்கின்றனர்’’ என்றார்.

கண்காட்சியில் பங்கேற்ற சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கோமதி கூறும்போது, ‘‘தற்போது பிளஸ் 2 முடித்துள்ளேன். வெளிநாட் டில் படிக்க வேண்டும் என்பது என் லட்சியம். அதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் இந்த கண் காட்சியில் வழங்கப்படுவதாக கேள்விப்பட்டு வந்தேன். தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம், வேர்விக் பல்கலைக்கழகம் உள் ளிட்டவற்றின் பிரதிநிதிகளிடம் பேசினேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது’’ என்றார்.

முதல் நாள் கண்காட்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். உலகம் முழுவதும் இருந்து இக்கண்காட்சியில் கலந்து கொண்டிருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் ஸ்டால் களுக்கு ஆர்வத்தோடு சென்று பல்வேறு விவரங்களை கேட்டறிந் தனர். அங்கு அளிக்கப்பட்ட விவரக் குறிப்புகள், கையேடுகளை பெற்றுக்கொண்டனர். இன்று (மே 3) ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x