

சென்னையில் செயல்பட்டு வரும் 40 பண்ணை பசுமைக் கடை களிலும் பழங்கள் விற்பனை நேற்று தொடங்கியது.
சென்னையில் 5 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் மொத்தம் 40 பண்ணை பசுமை கடைகள் செயல்பட்டு வரு கின்றன. இக்கடைகளில் 30-க்கும் மேற்பட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரி, திண்டிவனம் பகுதி களில் விவசாயிகளிடம் நேரடியாக திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டியூசிஎஸ்) காய்கறிகளைப் பெற்று பண்ணை பசுமை கடை களுக்கு விநியோகித்து வருகிறது. மற்ற கடைகளை விட விலை மலிவாக இருப்பதால் இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
இக்கடைகளில் நேற்று முதல் பழங்களின் விற்பனையும் தொடங் கப்பட்டுள்ளது. இப்பழங்களையும் டியூசிஎஸ் வாங்கி, கடைகளுக்கு விநியோகித்து வருகிறது. இக் கடைகளில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.130, ஆரஞ்சு ரூ.70, மாதுளை ரூ.110, சாத்துக்குடி ரூ.50, பச்சை திராட்சை ரூ.85, கருப்பு திராட்சை ரூ.100, சப்போட்டா ரூ.35, பப்பாளி ரூ.15, தர்பூசணி ரூ.15, பங்கனபள்ளி மாம்பழம் ரூ.45, செந்தூரா மாம்பழம் ரூ.40, பச்சை வாழை ரூ.22, ஏலக்கி வாழை ரூ.35 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக பண்ணை பசுமை கடை அதிகாரி ஒருவர் கூறும்போது:
“பண்ணை பசுமை கடைகளில் பழங்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருப்பதைத் தொடர்ந்து, பழ விற்பனையையும் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.
திருவல்லிக்கேணி பண்ணை பசுமை கடைக்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் கூறும் போது, “தரமாகவும், விலை குறை வாகவும் இருப்பதால், நான் இங்கு மட்டுமே காய்கறிகளை வாங்கி வருகிறேன். இப்போது இங்கு பழங்களும் விற்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.