

ஜெயலலிதா விடுதலையை விமர்சித்து தமிழக அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து அறிக்கைகளை வெளியிட தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
அந்தத் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரிசையாக அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியிட்டனர். நீதி வென்றுவிட்டது என்றெல்லாம் அறிக்கைகள் வெளியாகின.
ஆனால், இந்தமுறை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட செய்தி வெளியாகி இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியும் தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து அறிக்கை வெளியிட தயங்குவதாக அதிமுக தொண்டர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.