புதுச்சேரியில் மோசமான நிலையில் பள்ளி கட்டிடங்கள்: அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மோசமான நிலையில் பள்ளி கட்டிடங்கள்: அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுச்சேரியில் மோசமான நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைக்கும் பணி மேலும் தாமத மாகிறது. பள்ளி கட்டிடங்கள் உள் கட்டமைப்பு தொடர்பாக அரசு மீது இந்திய தணிக்கைத்துறை (சிஏஜி) குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் பாரம்பரியமான கட்டிடங்களை சீரமைக்கும் பணி பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. மொத்தம் உள்ள 21 கட்டிடங்களில் முதல் கட்டமாக நகராட்சி அலுவலகம் இயங்கிய மேரி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஆனால் இக்கட்டிடம் இடிந்தது.

மேரி கட்டிடம் மட்டுமில்லாமல் மிஷன் வீதியில் உள்ள கலவைக் கல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளி, வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி, பான்சியானோ அரசு பெண்கள் பிரெஞ்சு பள்ளி கட்டிடங்கள் ஆகியவையும் மோசமாக இருந்தன. இதையடுத்து இப்பள்ளி மாணவ, மாணவிகள் வேறு பள்ளிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் இக்கட்டிடங் களை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தொல்லியல்துறை, இந்திய தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் வந்தனர். ஆனால் ஐந்து மாதங்களாகியும் இப்பள்ளி கட்டிடங்களை புதுப்பிப்பது தொடர்பாக எவ்வித பணியையும் அரசு தரப்பில் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக கல்வித்துறை தரப்பில் கேட்டதற்கு, "சென்னை யில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அறிக்கையின் அடிப்படையில் பள்ளி கட்டிடத்தை புதுப்பிப்பது தொடர் பாக முடிவு எடுக்க அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இதுவரை அறிக்கை வரவில்லை. அதேபோல் பொதுப்பணித்துறை தரப்பும் தனியாக அறிக்கை தயாரித்துள்ளது. அரசுதான் இதுதொடர்பாக முடிவு எடுக்கவேண்டும்" என்றனர்.

இப்பள்ளிகள் அமைந்துள்ள தொகுதியின் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் கூறுகையில், "பள்ளிக்கட்டிடத்தின் தன்மையை ஆய்வு செய்து ஐந்து மாதங் களாகியும் அறிக்கை கிடைக்க வில்லை. இங்குள்ள அரசு பொறியியல் கல்லூரி தரப்பில் தெரிவித்திருந்தால் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுத்து இருக்க முடியும். ஆனால் அரசு சரியான முறையில் செயல் படவில்லை" என்றார்.

பெற்றோர் தரப்பில் கூறுகையில், "வஉசி பள்ளி யில் படித்த மாணவர்கள் வேறு பள்ளிக்கு பாதிபேர் மாற்றப் பட்டுள்ளனர். மேல்நிலைப் படிக்கும் மாணவர்களுக்கு பழுதடைந்த கட்டிடத்துக்கு பின்புறம் உள்ள இடத்தில் உள்ள கட்டிடத்தில் வகுப்புகள் நடக்கின்றன. கடற்கரை சாலை அருகில் உள்ள பான்சியோனா பெண்கள் உயர் நிலைப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க 14 ஆண்டு களுக்கு மேலாக மனு தரப்பட்டது. தற்போது மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பணிகளே நடக்கவில்லை. இதே நிலைதான் கலவை கல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும் நிலவுகிறது" என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில் இந்திய கணக் காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையிலும் பள்ளி உள்கட் டமைப்பு விவகாரம் தொடர்பாக கல்வித்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"தேசிய நடுநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் புதுச்சேரி பள்ளி களின் உள் கட்டமைப்புக்காக கடந்த 2009 முதல் 14ம் ஆண்டு வரை ரூ.22.78 கோடி ஒதுக்கப் பட்டது. பணத்தை சரியாக செலவு செய்யாததால் மத்திய அரசு அடுத்து நிதி ஒதுக்கவில்லை. நிதி இருந்தும் பள்ளிகளை மேம்படுத் துவதில் தாமதம் ஏற்பட்டது.

கட்டுமான பணிகள் முழுமை பெறாமல் இருந்தன. பள்ளி களுக்கு தேவையான உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த முடிய வில்லை. கல்வி முன்னேற்றத் திட்டத்தின் கீழ் நிதியுதவி தர தயா ராக இருந்தும், கல்வித்துறை செயல்பாட்டால் இந்த நோக்கமே புதுச்சேரியில் தோல்வியடைந் தது" என்று தற்போது வெளியான அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in