

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 33 விஏஓ அலுவலகங்கள் முன்பும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தினர் (ஏஐடியுசி) நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
‘தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் நிலவும் பல்வேறு சீர்கேடுகளைக் களைய வேண்டும். தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் களின் வேலை நிலையை முறைப் படுத்துதல் சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். கட்டுமானத்தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான பண பலன்களை அதிகரித்து வேண்டும். விலையில்லா வீட்டு மனைகள் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழு வதும் 130 பெண்கள் உட்பட 315 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கான தங் கள் கோரிக்கைகள் அடங்கிய மனு வை விஏஓ-க்களிடம் அளித்தனர்.