Published : 08 May 2014 08:32 AM
Last Updated : 08 May 2014 08:32 AM

முல்லைப் பெரியாறு வழக்கின் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட் டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் இதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என் றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற் றுள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு கட்சித் தலை வர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

பி.எஸ். ஞானதேசிகன் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்):

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.தமிழக மக்களுக்கு இந்த தீர்ப்பு இரட்டிப்பு மகிழ்ச்சி. இதை ஒரு மாநிலத்தின் வெற்றி, ஒரு மாநிலத்தின் தோல்வி என்று பார்க்காமல் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்கிற ரீதியில் இரு மாநில மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை சிறப்பான முறையில் நடத்திய தமிழக அரசுக்கும், அதன் வழக்கறிஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

விஜயகாந்த் (தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர்)

இந்த தீர்ப்பு தமிழக மக்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்)

ஜெயப்பிரகாஷ் நாராயணன், இடிமுழக் கம் சேகர், சின்னமனூர் இராமமூர்த்தி ஆகிய மூவரும் முல்லைப்பெரியாறைக் காக்கத் தங்கள் உயிர்களைப் பலியிட் டனர். இன்றைய தீர்ப்பு மிகுந்த நிம்ம தியைத் தந்து உள்ளது. இந்தப் பிரச்சி னையில் உச்சநீதிமன்றத்தில் சரியான அணுகுமுறையைக் கையாண்ட தமிழக அரசு, உடனடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்குப் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

தமிழகத்தின் உரிமைகளை இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கேரள அரசு கட்டக்கூடாது என்றும், இப்போதுள்ள அணையை பராமரிக்கும் பொறுப்பு தமிழகத்திடமே இருக்கும் என்றும், இதை கண்காணிப் பதற்காக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் மூவர் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டி ருப்பதும் தமிழகத்திற்கு மிகவும் சாதகமான தாகும்.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இரு மாநில மக்களுக்கும் இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மாநில செயலர், மார்க்சிஸ்ட் கட்சி)

முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டப் பிரச்சினை தமிழ்நாட்டின் பத்து தென்மாவட்ட மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினை மட்டுமின்றி, தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நம்பிக்கை தரும் நற்செய்தியாக இருக்கிறது. முல்லைப் பெரியாறிலிருந்து குடிநீருக்கும், பாசனத்திற்கும்பெற்று வந்த தண்ணீரை தடையின்றிப்பெற இந்தத் தீர்ப்பு உதவியுள்ளது.

கி.வீரமணி,(திராவிடர் கழகத் தலைவர்)

தமிழக விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பு இது. ஐந்து மாவட்ட விவசாயிகள் இதனால் பயனடைவர். இந்த தீர்ப்பினை மதித்து கேரள அரசு செயல்பட்டு தமிழகத்துடன் நல்லுறவை வளர்க்கவேண்டும்.இருமாநில உறவுகள் வலுப்பட உச்சநீதிமன்ற தீர்ப்பு உதவட்டும்.

பெ.சண்முகம் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்)

கேரள மாநில அரசின் அணுகு முறையால் பல்லாண்டு காலமாக இழுத் தடிக்கப்பட்டு வந்த வழக்கில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

தொல்.திருமாவளவன் (தலைவர்.விடுதலைச் சிறுத்தைகள்)

தமிழர்களின் உரிமை நிலைநாட்டப் பட்டிருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.நீண்ட நெடுங்காலமாக தமிழக, கேரள மக்க ளிடையே நிலவிவரும் நல்லுறவைப் பாது காக்க கேரள அரசும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். இதனை கேரளாவுக்கு எதிரான வெற்றி என்பதுபோல் சித்திரித்து இரு மாநில மக்களிடையே நாம் கசப்பு ணர்வை ஏற்படுத்திவிடக் கூடாது. இதில் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டு மென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி யின் தலைவர் பாரிவேந்தர், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் டாக் டர் சேதுராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக்கழகத்தின் துணைத்தலைவர் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா ஆகியோர் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x