

தஞ்சை மேம்பாலம் அருகேயுள்ள பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய 26 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதே வளாகத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 17 மாணவர்களில் 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய 22 பேரும் தோல்வியடைந்தனர். 10-ம் வகுப்பில் 21 பேரில் 11 பேர் தோல்வியடைந்தனர்.
இந்த நிலையை மாற்றக் கோரி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். இதையடுத்து, இப்பள்ளியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. நடப்பாண்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.