

சுங்கத் துறை அதிகாரிகளின் நடவ டிக்கையைக் கண்டித்து சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சரக்குப் போக்குவரத்து பாதிப்படைந் துள்ளது.
சென்னை துறைமுகத்தில் நாளொன்றுக்கு இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப் படுகின்றன. இதற்காக துறை முகத்துக்கு வரும் லாரிகள் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்றளித்த பின்புதான் சரக்குகளை கையாள முடியும்.
இந்நிலையில், சரக்குகளை சோதனை செய்வதற்காக சுங்கத் துறை அதிகாரிகள் லாரி ஓட்டுநர் களிடம் இருந்து பணம் வசூலிப் பதாக புகார் கூறப்பட்டது. இதை யடுத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் துறைமுகத்தில் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சுங்க அதிகாரிகள் சட்டவிரோதமாக வசூலித்த பணம் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் கன்டெய்னர் லாரிகளை சோதனை செய்வதில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.