Published : 10 May 2015 07:52 AM
Last Updated : 10 May 2015 07:52 AM

ஜெயகாந்தனுக்கு மணிமண்டபம் அமைக்க முயற்சி செய்வோம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்த னுக்கு அனைத்துக்கட்சி ஏற்பாட் டின் பேரில் மணிமண்டபம் அமைப் பதற்கான முயற்சியை எடுப்பேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில் சென்னையில் நேற்று ஜெய காந்தன் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்துக்கு இளங்கோவன் தலைமை வகித்தார். காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் ஆ.கோபண்ணா வரவேற்றுப் பேசினார். மார்க்சிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன், திமுக எம்.பி. கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் சுப்பராயன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயகாந்தனின் நண்பர் பி.ச.குப்புசாமி ஆகியோர் பேசினர்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ் ணன் பேசும்போது, ‘‘ஜெயகாந்தன் பேரிலக்கியங்களை படிக்க வில்லை. சாமான்ய மக் களிடமிருந்தே கதைகளைப் படைத்தார். சென்னை தமிழுக்கு இலக்கிய அந்தஸ்தை தந்தவர் அவர். அவரைப் பின்பற்றிதான் இன்றைக்கு நாங்கள் உருவாகியுள்ளோம்’’ என்றார்.

திமுக எம்.பி. கனிமொழி:

இந்த நினைவஞ்சலி நிகழ்ச் சியை தமிழக அரசுதான் நடத்தியிருக்க வேண்டும். தமிழகத் தில் எழுத்தாளர்கள் கொண் டாடப்படுவதில்லை. கேரளாவில் வைக்கம் முகம்மது பஷீர் இறந்தபோது 16 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆனால், தமிழகத்தையே மாற்றிப் போட்ட ஜெயகாந்தனுக்கு தமிழக அரசு சார்பில் ஒற்றை மாலைகூட போடவில்லை. ஜெய காந்தனின் எழுத்து அடுத் தடுத்த தலைமுறைக்கு பயணித் துக்கொண்டே இருக்கும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:

ஜெயகாந்தனின் எழுத்தை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், அவரது பேச்சை நிறைய முறை கேட்டிருக்கிறேன். தமிழகத்தில் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருப்பதற்கு காரணமான சிலரில் ஜெயகாந்தன் முக்கியமானவர். தமிழக அரசு அவருக்கு மரியாதை செய்திருக்க வேண்டும். ஜெயகாந்தனின் நினை வாக மணிமண்டபம் மாதிரி ஏதாவது ஒன்றை அவரது பெயர் சொல்லும் வகையில் அமைக்க வேண்டும். இதை அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக்கட்சி முயற்சியில் செய்ய வேண்டும். இதற்காக திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் என அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திப்பேன்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x