Published : 19 May 2015 07:33 AM
Last Updated : 19 May 2015 07:33 AM

சிந்து சமவெளி நாகரிக காலத்து அரிய பொருட்கள்: சென்னை அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள அருங்காட் சியகங்கள், கலைக் கூடங்கள் பற்றிய சிறப்பு கண்காட்சி சென்னை எழும்பூர் அரசு அருங் காட்சியகத்தில் 24-ம் தேதி வரை நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் தேதி சர்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அருங்காட்சியக தினத்தையொட்டி (நேற்று) தமிழ கத்தில் உள்ள அருங்காட்சி யகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் பற்றிய ஒரு வார கால சிறப்பு கண்காட்சிக்கு சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ளது.

எழும்பூர் அரசு கண்காட்சியக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கண்காட்சி அரங்கில் சிறப்பு கண் காட்சியை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கிவைத்துப் பார்வையிட் டார். இந்த கண்காட்சியில், தமிழ கத்தில் உள்ள அரசு கண்காட்சிய கங்கள் மற்றும் கலைக்கூடங்களின் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தாவர புதை வடிவங்கள், பழங்கால தெய்வச் சிலைகள், சிந்து சமவெளி நாக ரிகக் கால கூஜா, மண் வளை யல், பானை ஓடு ஆகியவற்றை கண்காட்சியில் காணலாம். மேலும், தோல் பொருட்கள், நாணயங்கள் மற்றும் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் பழங்காலத்து தொழில்நுட்ப முறைகள் தொடர் பான விவரங்களும் கண்காட்சி யில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சிறப்பு கண்காட்சி குறித்து தமிழக அரசின் சுற்றுலா, கலாச்சாரம், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலரும், அருங் காட்சியகங்கள் ஆணையருமான ஆர்.கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

பன்னாட்டு அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்தச் சிறப்பு கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள 21 மாவட்ட அருங்காட்சியகங்களின் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள் ளலாம். சிந்துசமவெளி நாகரிக கால அரிய பொருட்கள், பண் டைய கால ஓவியங்கள், முக லாயர் காலத்து ஓவியங்கள் போன்றவற்றையும் பார்க்கலாம்.

மேலும், அருங்காட்சியகம், தொல்பொருள் ஆய்வு தொடர் பாக 1948, 1963களில் வெளியிடப் பட்ட அரிய புத்தகங்களும் கண் காட்சியில் இடம்பெற்றுள்ளன. அவை விற்பனைக்கும் கிடைக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த கண்காட்சி அரியதொரு வாய்ப்பாகும். இவ்வாறு கண்ணன் கூறினார்.

இந்த கண்காட்சி வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியை பார்க்கலாம். அனுமதி இலவசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x