

திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள் ளன. இந்த மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை யில், புதிய மாவட்டச் செயலாளர் களின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கவுள்ளது.
கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொரு ளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொள்கின்றனர்.
சட்டப்பேரவை தேர்தல் பணி களை தொடங்குவது, தேர்தல் நிதி வசூல், மாவட்டந்தோறும் மக்களை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மதுரையில் நேற்று நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத் தில் ஸ்டாலின் பங்கேற்றார். இது போன்ற கூட்டத்தை கோவை, திருச்சி, விழுப்புரம் என தமிழகத் தின் முக்கிய நகரங்களில் நடத்து வது தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களுக்கு கருணாநிதி ஆலோசனை வழங்கவுள்ளார்.
‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர் கள் கூட்டத்தில் முடிவு செய்வோம்’ என்று கருணாநிதி கூறியிருந்தார். எனவே, அதுபற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.