சர்வதேச பின்னலாடை கண்காட்சி: மே 6-ல் திருப்பூரில் தொடக்கம்

சர்வதேச பின்னலாடை கண்காட்சி: மே 6-ல் திருப்பூரில் தொடக்கம்
Updated on
1 min read

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய பின்னலாடைக் கண்காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, ஆண்டுதோறும் இரு முறை நடத்தும் கோடை கால சிறப்பு சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி, வரும் 6-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருப்பூரில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

40-வது கோடை, வசந்த கால ஆயத்த ஆடை கண்காட்சி, திருப் பூரை அடுத்த திருமுருகன்பூண்டி ஐ.கே.எப். வளாகத்தில் வரும் 6 முதல் 8-ம் தேதி வரை நடை பெறவுள்ளது.

ஏ.இ.பி.சி. தலைவர் விரேந்தர் உப்பல் தொடங்கி வைக்கிறார். திருப்பூர், மும்பை, கேரளா, பெங்களூரு, அரியானா ஆகிய மாநிலங்களின் முன்னணி நிறு வனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் 50 ஏற்றுமதியாளர்கள் பங்கேற்கின்றனர். பேஷன் ஷோ, எக்ஸ்போர்ட் மீட் உள் ளிட்டவையும் நடைபெறுகின்றன.

கடந்த 2011-12-ம் ஆண்டில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.12 ஆயிரத்து 500 கோடியாக இருந்தது. இதுவே 2014-15-ல் ரூ.21 ஆயிரம் கோடி யாக வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி. அதில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி.

கனடாவுடன் ஒப்பந்தம்

கனடா நாட்டுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் வரும் செப்டம்பர் மாதம் அங்கிருந்து பின்னலாடை ஆர்டர்கள், திருப்பூருக்கு வரும் வாய்ப்புள்ளது கனடாவை தொடர்ந்து ஆஸ்திரேலியா வுடனும் விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது போன்ற சாதகமான சூழ்நிலை களால், அடுத்த 3 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in