பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது: இளங்கோவன் குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது: இளங்கோவன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கடந்த 11 மாத பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சற்று உயர்ந்ததும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக் கது. அமெரிக்க டாலருக்கு நிக ரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ. 65 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 11 மாத பாஜக ஆட்சியில் நாட் டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டதையே இது காட்டுகிறது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டு வதை தமிழக காங்கிரஸ் உறுதி யோடு எதிர்க்கும். மின் உற் பத்தி, குடிநீருக்காக தடுப் பணைகள் கட்டுகிறோம் என கர்நாடக முதல்வர் சித்தரா மையா கூறுவதை ஏற்க முடி யாது. அவர்களுக்கு தண்ணீர் தேவையெனில் வேறு வழி களை ஆராய வேண்டுமே தவிர, தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீரை தடுக்கக் கூடாது.

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இந்த சம்பவத்தில் சிபிஐ விசா ரணையின் மூலமே உண்மை வெளியாகும்.

திமுக, தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி ஏற்படுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வரவுள்ளார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆளுநரிடம் இன்று மனு

கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களின் பட்டியல் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆளுநர் கே.ரோசய் யாவிடம் வழங்கப்படும். அப் போது அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்படும். இதற் காக எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து சிந்தாதிரிப்பேட்டை பழைய சித்ரா திரையரங்கம் வரை பிற்பகல் 2 மணிக்கு பேரணி நடைபெறும் என்றார் இளங்கோவன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in