Published : 21 May 2015 08:11 AM
Last Updated : 21 May 2015 08:11 AM

மத்திய அரசைக் கண்டித்து மாநாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

தருமபுரியில் மே 25-ம் தேதி மத்திய அரசைக் கண்டித்து மக்கள் கோரிக்கை மாநாடு நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித் துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் குணசேகரன் நேற்று தருமபுரியில் பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சமீபத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்து விவாதித்தது. மத்திய அரசின் செயல்பாடுகளால் மக்கள் படும் அவதி குறித்த கருத்துக்கள் இந்தக் கூட்டத்தில் எதிரொலித்தது. மோடி அரசு அடிக்கடி எரிபொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இந்தியா முழுக்க 1.80 லட்சம் ஹெக்டேர் நிலம் தரிசாக கிடக்கிறது. விவசாயிகள் தற்கொலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு அரசாக தற்போதைய மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை காங்கிரஸ் ஆட்சி கொண்டுவர முயன்றபோது பாஜக அன்று எதிர்த்தது. ஆனால், அதே முதலீட்டை தற்போது கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மசோதா வுக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு வந்தபோதும் கூட அதை சட்டமாக்கிட மோடி அரசு முயற்சி கள் மேற்கொண்டு வருகிறது. இந்த சட்டம் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகளால் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்டித்தும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கமும் நடந்து வருகிறது. மே 25-ம் தேதி தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான மக்கள் கோரிக்கை மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதுதவிர தருமபுரி மாவட்டம் உருவாகி 50 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் மாவட்ட மக்கள் பிழைப்பு தேடி பல்வேறு ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்ற வசதிகள் போதிய அளவு மேம்படுத்தப்படவில்லை. இதைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருகிறோம்’ என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது, அரூர் சட்டப் பேரவை உறுப்பினர் டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் குமார், மாநிலக் குழு உறுப்பினர் கள் ஆனந்தன், மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x